Saturday, August 3, 2013

நண்பன் என்னும் வரமொன்றை நான் பெற்றேன்..!!!

இணைந்து பிறக்கவில்லை..
இருந்தாலும் நம்மின்
இதயங்கள் இணைந்தபின்
வருந்தவில்லை..

இரும்பால் வடிக்கப்பட்ட
இதயமாயிருந்தால்
நொறுங்கியிறுக்கும் என் நட்பு..
நல்லவேளையாய்..
ஈரங்களின் மறுபதிப்பாய்..
மௌனங்களின் மொழியாய்..
பூக்களின் வாசமாய்..
ராகங்களின் ஸ்வரமாய்..
இப்படி இத(ய)மாய்
உன் இதயமிருந்ததால்
இன்று இனிய
இத(மான)ய நண்பனாய் நீ..

உனக்கு வாழ்த்துக்கள்
கூறப்போவதில்லை..
இன்றுமட்டும்
வாழ்த்துபவர்களுக்கு
இந்த நாளை நான் விட்டுவிடுவதால்..
உன்னை ஒவ்வொரு நாளும்
வாழ்த்தும் மனமாய் நானிருப்பதால்...
உனக்கு வாழ்த்துகள் கூறப்போவதில்லை...

No comments:

Post a Comment