Friday, January 11, 2013

~ தமிழில் கையெழுத்திட்ட காந்தி... வரலாற்று பதிவு ~

தமிழ் மக்களோடு தொடர்பு கொண்டு தமிழர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு தென் ஆப்பிரிக்காவில் அவர்களுக்காகப் பாடுபட்ட காந்தி அடிகளாருக்கு நண்பராக விளங்கிப் பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர் தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆசாரி. அவர் தாயார் உடல் நலமில்லாமலிருந்த போது காந்திஜி தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10 ரூபாய் பணவுதவி அனுப்பினார் அதில் காந்தி அடிகள் சுப்பிரமணிய ஆசாரிக்குத் தம் கைப்படத் தமிழில் கடிதம் எழுதினார். இக்கடிதத்தில் ஆவணி மாதம் என்று தமிழ் மாதத்தைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதும் தமிழில் கையொப்பமிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. 

தமிழ்நாட்டில் பாரதி மணிமண்டபம் அமைத்தபோது அதற்கான வாழ்த்தைத் தமிழில் எழுதினார். இவற்றைத் தவிர நீரில் எழுத்தொக்கும் யாக்கை என்பதையும் தமிழில் தம் கைப்பட எழுதியுள்ளார். மோ.க.காந்தி என்று பல சந்தர்ப்பங்களில் தமிழில் கையெழுத்திட்டுள்ளார்.
திருவள்ளுவர், ஒளவையார், கம்பர் மாணிக்கவாசகர், நந்தனார், தாயுமானவர் முதலிய தமிழ் ஞானிகளை அவர் முழுமையாக அறிந்திருந்தார்
தமிழ்நாட்டுக்கு பல முறை காந்தி அடிகள் வருகை புரிந்திருக்கிறார். தில்லையாடிக்குச் சென்று தம் நண்பர் சுப்பிரமணிய ஆசாரியை 1-5-1915 இல் அவர் இல்லத்தில் சந்தித்திருக்கிறார்.
மறுநாள் 2-5-1915 இல் அவருக்கு மயிலாடுதுறையில் தமிழ் மக்கள் பெரிய வரவேற்பை அளித்தனர். அவருக்கு அளித்த வரவேற்பு இதழ் ஆங்கிலத்தில் அமைந்திருந்தது. மகாத்மா ஆத்திரப்பட்டுச் சொன்னார். காங்கிரஸ் திட்டங்களில் சுதேசி பற்றிய தீர்மானம் இருக்கிறது. நீங்களோ உங்களுடைய வரவேற்பு உரையை ஆங்கிலத்தில் அச்சிட்டிருக்கிறீர்கள். ஆங்கிலத்தின் மீது எனக்கு வெறுப்புக் கிடையாது. 
ஆனாலும் தாய்மொழியைக் கொன்றுவிட்டு அதன்மீது (சமாதியின் மீது) ஆங்கில மொழியை வளர்த்தீர்களானால் நீங்கள் சரியான முறையில் சுதேசியத்தைக் கடைபிடிக்கவில்லை என்பதுதான் பொருள் என்று பேசினார்.





Wednesday, January 9, 2013

இம்சை's of India

எப்படியும் நம்ம friends கோஸ்டிலையோ roommates-லையோ ஒருத்தனாவது லவ் பண்ணிட்டு சுத்திட்டு இருப்பான். இவனுங்க என்னெல்லாம் இம்சை பண்றானுங்க??

காலைல 6 ,7 மணிக்கு, "Good morning dear, have a nice day....." அப்படி இப்படின்னு நம்ம காது பக்கத்துலையே cell Phone keypad- கொட கொட கொட கொட type பண்ணி அந்த பொண்ல எழுப்பறதுக்கு முன்னாடி நம்மள எழுப்பிருவானுங்க....இல்லன்னா அந்த பொண்ணு இவனுக்கு call பண்ணி, நம்மளையும் சேத்து எழுப்பி விட்டுடும்.

அவன் குளிக்க போனா, கக்கூஸ்போனா  phone-ல அந்த பொண்ணு கிட்ட இருந்து வர்ற callக்கு நம்மள attender ஆக்கிருவாணுக. Call attend பண்றது கூட பரவால்ல, நம்ம பேசுனா அந்த பொண்ணு ஏதோ  ஒரு வல்லரசு நாடு மாதிரியும், இவர் ஒரு வல்லரசு நாடு மாதிரியும், அணு ஆயுத பேரம் பேசிக்க Phone பண்ண மாதிரியும், நடவுல நம்ம எதோ பாகிஸ்தான் ISI உளவு அமைப்பு, Call attend பண்ணிட்ட மாதிரியும்  reaction குடுக்கும்.

Friends எல்லாம் உக்காந்து பேசிட்டு இருக்கும் போது எவனாவது ஏதாவது மொக்க காமெடி பண்ணா, "ஏன்டா இப்படி காட்டு மொக்கைய போட்டுட்டு இருக்கீங்க....??" ன்னு கேப்பானுக, கொஞ்ச நேரத்துல அந்த பொண்ணு கிட்ட கடலை போடும்போது அதே காமெடிய சொல்லி விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருப்பானுக...

"முக்கியமான matter மச்சி, யார்கிட்டயும் சொல்லிராதன்னு" சொல்லி ஏதாவது Matter சொன்னா, Maximum மூணாவது நாள் கடலை போடும்போதாவது அந்த பொண்ணு கிட்ட சொல்லிருவானுங்க...

முக்கியமா இந்த லவ் பண்ற பசங்களோட உக்காந்து சரக்கு மட்டும் அடிக்கவே கூடாது. சரக்கு அடிக்கும் போது கொஞ்சம் மப்பு ஏறிடுச்சுனாலே, ஒரு கேள்வி கேப்பானுக....
"மச்சி வீட்ல accept பண்ணிக்குவாங்களா...? எங்க கல்யாணம் நடக்குமா...??"
நம்மளும், "கண்டிப்பா நடக்கும் மச்சி" ன்னு சொன்னம்னா 
"டேய் உண்மையா யோசிச்சு சொல்லு டா, எனக்காக சொல்லாத...." ன்னு சொல்லுவானுக... 
நம்ம "கொஞ்சம் கஷ்டம் தாண்டா, நீ வேற Caste, அவ வேற Caste, உங்க வீட்ல ஒத்துக்கிட்டாலும் அவங்க வீட்ல ஒத்துக்கணும்..,கொஞ்சம் கஷ்டம் தான் மச்சி...." ன்னு சொன்னா.., 
"ஏண்டா friendக்காக கொஞ்சமாவது Positive-ஆ சொல்ல மாட்டியா...?" ம்பாணுக....

பாதி சரக்குல இப்படி எல்லாம் கேள்வி கேட்டா  "நீங்க ரெண்டு பெரும் புன்னகை மன்னன் கமல் ரேகா மாதிரி தற்கொலை பண்ண ட்ரை பண்ணி சாகாம.., மரத்துல தொங்க தாண்டா போறீங்க" ன்னு சொல்லலாம்னு இருக்கும். ஆனா மிச்ச சரக்க அடிக்க விட மாட்டனேங்கற ஒரே காரணத்துக்காக,
மச்சி ஒன்னும் கவலை படாத நாங்க எதுக்கு இருக்கோம்.., கண்டிப்பா சேத்து வெப்போம் உங்க கல்யாணம் கண்டிப்பா நடக்கும்..., ன்னு ஏதேதோ சொல்லி மிச்ச சரக்க அடிக்கணும்.
Cricket விளையாடும் போது முக்கியமான Fielding நேரத்துல போன் எடுத்து காதுல வெச்சிட்டு பந்த புடிக்காம விட்டுட்டு நிப்பாணுக...

அப்புறம் அந்த பொண்ணோட Birthdayக்கு  என்ன Gift வாங்கலாம்;
அவ பக்கத்து வீட்டு குட்டி பொண்ணோட Birthdayக்கு என்ன Gift வாங்கலாம்;
அவள  Meet பண்ண போகும்போது என்ன சட்ட போடலாம்;ன்னு
Discuss பண்ணி மொத்தம் 365 Night-ல 15 Night தூங்க விட மாட்டானுக...

அன்னைக்கு Meet பண்ணும்போது என் Cchoolfriend Divyaக்கு நா அனுப்பின Message-a பாத்துட்டா, என் கிட்ட பேச மாட்டேங்குறா...,
அந்த பொண்ணுக்கு எவனோ தப்பா Messgae அனுப்புறான்...,
அவ சித்தி பொண்ணு யாரையோ லவ் பண்ணி Register Marriage பண்ணிக்கிட்டா.., இதனால எங்க Marriage-க்கு பிரச்சன வரும்..,
இப்படி பொலம்பி ஒரு 25 Night தூக்கத்த கெடுத்துருவானுக.....

ஆக இந்த பிரச்சனைல இருந்து தப்பிக்க ஒரே வழி, நம்ம Friend லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்..னா, ஒன்னு நம்ம அவன் கிட்ட இருந்து பிரிஞ்சரனும், இல்ல அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சரனும்....

                            வாழ்க வையகம் வாழ்க வளமுடன்