Saturday, December 8, 2012

பேஸ்புக் 3


மிக முக்கியமான கண்டுபிடிப்புகளை உற்பத்தி செய்யும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில், டாஸ்பெர்ரி என்னும் இடத்தில், எட்வர்ட் மற்றும் கேரன் தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாகப் மே 14 1984 அன்று பிறந்தவர் மார்க் ஜக்கர்பெர்க். "கோழைகளின் பல்மருத்துவர்" என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் வேடிக்கை மனிதர், மார்க்கின் தந்தை மிஸ்டர் எட்வர்ட் ஜக்கர்பெர்க் . தனது உளவியல் தொழிலை குடும்ப மற்றும் குழந்தைகளின் நலன் கருதி தியாகம் செய்தவர் மார்க்கின் தாய் கேரன். சமுக மாற்றம் கொண்டு வந்த அற்புதக் குழந்தையின் பெற்றோருக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். ராண்டி, டோனா, ஏரியலி என்ற மூன்று பெண் குழந்தைகளுக்கு மத்தியில் பிறந்த ஒரே ஒரு ஆண் குழந்தை மார்க்.ஜக்கர்பெர்க். இரே ஆண் குழந்தை என்பதால் மார்க் இளவரசனாகவே வளர்க்கப்பட்டான். மூன்று சகோதரிகளுக்கும் மார்க் என்றால் அவ்வளவு இஷ்டம். தனது சகோதரிகளுடன் சேர்ந்து சேட்டைகள் செய்வது என்றால் மார்கிற்கோ அலாதி ஆர்வம்.

"அப்பன் எட்டடி பாய்ந்தால் மகன் பதினாறு அடி பாய்வான்" என்பது பழமொழி. எட்டடி பாயும் அப்பாவான எட்வர்ட் பற்றி பார்த்துவிட்டு மார்க்கின் வாழ்க்கைக்குள் நுழைந்தால் சுவாரசியம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். 


அஞ்சல் துறையில் வேலை பார்க்கும் அப்பா, குடும்பத் தலைவி அம்மா என்ற நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர் எட்வர்ட் ஜக்கர்பெர்க். எட்வர்ட் இருந்த ஏரியாவில் முதன்முதலில் கலர் டிவி வாங்கியது எட்வர்டின் குடும்பமே. தொலைகாட்சி வந்ததாலோ என்னவோ அவர்கள் வீட்டில் இருந்த ரேடியோ மூலைக்குள் முடங்க ஆரம்பித்தது, மூலைக்குள் முடங்கிய அந்த ரேடியோவை பிரித்து மேய்ந்ததில் இருந்து ஆரம்பித்தது எட்வர்டுக்கும் எந்திரங்களின் மீதான காதலும். அந்தச் சிறுவயதில் தனக்கிருந்த அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு கையில் கிடைக்கும் எந்திரங்களை எல்லாம் பிரித்து மேய்ந்து கொண்டிருப்பார். எந்திரங்களுக்கும் உணர்வு உண்டு என்று பரிபூரணமாக நம்புவார் இன்றும் நம்புகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றுடன் பேசிக் கொண்டிருப்பார். 

எட்வர்டின் பதின்ம வயதும் கணினி யுகத்தின் அதிதீத வளர்ச்சியும் ஒன்றாகவே இருந்தது. அறை முழுவதையும் அடைத்துக் கொண்டு பிரமாண்டமாய் இருக்கும் கணினிகளின் மீது எட்வர்டிற்கு சிறுவயது முதலே தனிபிரியம் உண்டு. ஆனால் எட்வர்டின் அப்பாவிற்க்கோ அவரை ஒரு மருத்துவராக பார்க்க வேண்டும் என்று ஆசை. முட்டாள்களின் மூலதனம் கணினி என்பது எட்வர்ட் அப்பாவின் வாதம். எட்வர்ட் பல்மருத்துவம் பயின்று மருத்துவர் ஆன பின்பும் அவருக்கு கணினிகளின் மீது இருந்த ஆர்வம் தனியவே இல்லை. முழுமையாக கணினி மயமாக்கபட்ட முதல் பல் மருத்துவமனை எட்வர்ட் ஜக்கர்பெர்க் உடையது, என்பது இங்கே கூடுதல் தகவல். அவரது மருத்துவமனை வீடு என்று எங்கும் கணினி மயம். கணினி மயமாக்கபட்ட மருத்துவமனை, வலி தெரியாமல் பல்லை கழற்றி எடுக்கும் வேடிக்கை மருத்துவர் என்று எட்வர்ட் அந்தப் பகுதி முழுவதுமே மிகவும் பிரபலம். மக்கள் அவரை செல்லமாக அழைப்பது கோழைகளின் மருத்துவர் டாக்டர் இசட்.

எட்வர்ட் வேறு வழி இல்லாமல் மருத்துவம் பயின்றாலும் பொழுதுபோக்காக கணினியும் பயின்றார். அன்றைய காலகட்டத்தில் பிரபலமாக இருந்த கணினி மொழி அட்டாரி பேஸிக் (இன்று சி++ ஜாவா போல). எட்வர்ட் நேரம் கிடக்கும் போதெல்லாம் அட்டாரி பயின்றார். IBM தனது கணினிகளை பொதுமக்கள் பயன்பாடிற்கு கொண்டு வந்திருந்த நேரம் மிக லேட்டஸ்ட்டான IBM கணினியை வாங்கி தனது வீட்டில் நிறுவி இருந்தார் எட்வர்ட். அவர் எதிர்பார்த்தது போல் அந்த கணினி இயங்க வில்லை. மெமரி மற்றும் செயல்திறன் எதுவுமே அவர் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. பல குறைகள் இருந்தது. தனது முதல் கணினி அவருக்குக் கற்றுக் கொடுத்த பாடமாக எட்வர்ட் இவ்வாறு குறிபிடுகிறார் " ஒரு கணினி எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதையும் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதையும் என் கணினி எனக்குக் கற்றுக் கொடுத்துவிட்டது, இது மிகச் சிறந்த பாடம் எனக்கு".

1979 ம் வருடம் உளவியல் படிப்பு படித்துகொண்டிருந்த கேரனை காதல் திருமணம் செய்து கொண்டார் எட்வர்ட். இவர்களது முதல் குழந்தை ராண்டி, இரண்டாவது மார்க் மூன்றாவது டோனா குழந்தை வீட்டின் கடைசிக் குழந்தை ஏரியலி. இவர்களது நான்கு குழந்தைகளுமே மிகவும் புத்திசாலிகள் அதே நேரத்தில் சேட்டைகளும் மிக அதிகம். மார்க் தனது அக்கா ராண்டியுடன் சேர்ந்து செய்த குறும்புத் தனங்களில் இன்றளவும் மறக்க முடியாத நிகழ்வு என்று மார்க் குறிப்பிடுவது ப்ராப்ளம் Y2K.


ப்ராப்ளம் Y2K என்பது 1999 ம ஆண்டு டிசம்பரில் கணினி உலகம் சந்தித்த மிகப் பெரிய பிரச்னை. அதாவது கணினியில் தேதியை MM-DD-YY என்று குறிப்பது வழக்கம். 1999 என்பதை சுருக்கமாக 99 என்று குறிப்பது வழக்கம். 1999 ற்கு அடுத்த வருடம் 2000 இதனை கணினி 00 என்று கொள்ளும். குழப்பம் ஆரம்பித்தது இங்கே தான். 00 என்பதை கணினி 2000 என்று எடுத்துக் கொள்ளுமா அல்லது 1900 என்று எடுத்து கொள்ளுமா என்பதை யாராலும் தெளிவு படுத்த இயலவில்லை. உலகமே தலையை பிய்த்துக் கொண்டிருந்தது. ஒருவேளை 1900 என்று எடுத்துக் கொண்டால் மொத்த கணினி செயல்பாடும் வங்கி தொழில் பர்வர்த்தனைகளும் முடங்கிவிடும். கணினிமயமாகப்பட்ட துறைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தும் Y2K மிகப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தவில்லை. அதே நேரத்தில் கணினி உலகமும் சுதாகரித்துக் கொண்டது. தற்பொழுது வருடம் YYYY என்று குறிப்பிடப்படுவதற்கான காரணம் Y2K கொடுத்த எச்சரிக்கை தான். 

ப்ராப்ளம் Y2Kவிற்கும் மார்கிர்க்கும் என்ன சமந்தம் என்று கேட்கிறீகளா, மார்க் Y2Kவில் புரட்சி எதையும் உண்டு பண்ணவில்லை தனது குடும்பத்தில் மிரட்சியைத்தான் உண்டு பண்ணினான். 2000 வருடம் பிறக்கும் புத்தாண்டு தினத்தன்று சரியாக பனிரெண்டு மணியளவில் தனது வீட்டில் இருக்கும் தனது சகோதரி ராண்டியுடன் சேர்த்து தடை செய்துவிட்டு Y2K பிரச்னை காரணமாகத் தான் மின்சாரம் செயல் இழந்துவிட்டது, இனி மின்சாரமே வராது என்று தனது குடும்பத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருகிறார். நமக்கு இன்று மிக சாதாரணமாக தெரியும் இந்த விஷயம் அன்று மிகப் பெரிய பீதியை ஏற்படுத்திய ஒன்று என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 

சிறுவயது முதலே மார்க்கிற்கு கணினி மீது அலாதி ஆர்வம் அதற்க்கு மிக முக்கிய காரணம் அவரது தந்தை எட்வர்ட் ஜக்கர்பெர்க் தான். அன்றைய காலகட்டத்தில் கணினி என்பதே அபூர்வமான விசயமாக இருந்த நேரத்தில் எட்வர்டோ தனது அலுவலகம் குடும்பம் என்று எங்கும் கணினியால் நிரப்பி வைத்திருந்தார். இதில் ஆச்சரியமான விஷயம் மார்க் விளையாட்டுப் பொருளாக தனக்கு கணினி வேண்டும் என்று அடம்பிடிக்க எட்வர்டும் வாங்கிக் கொடுத்துவிட்டார். தனது மகனுக்கு கணினி மீது இருந்த ஆர்வத்தை எட்வர்ட் சரியான நேரத்தில் கணிக்க தவறியிருந்தால் பேஸ்புக் யுகத்தை நாம் இழந்திருப்போம். 



"
மார்க் உனக்கு வாங்கித் தந்த கம்ப்யூட்டர் எவ்ளோ தூசி அடைஞ்சு போய் இருக்குன்னு பாரு, இப்போ எல்லாம் நீ உன் கம்ப்யூட்டர் பக்கமே போறது இல்ல" எட்வர்ட் மார்கிடம் கடிந்து கொண்டார்.

"போங்கப்பா, இந்த கம்ப்யுட்டர் ரொம்ப போர், நா நினச்ச மாதிரி இது வேல செய்ய மாட்டேங்குது, என்னால இது கூட உருப்படியா எதுவும் விளையாட முடியாது, எனக்கு இது வேணாம், நான் விளையாட போறேன், டாட்டா", பதின்ம வயது சிறுவனுக்கு கம்ப்யூட்டர் போர் அடித்துவிட்டது, பாவம் அவன் என்ன செய்வான், கம்ப்யுட்டரை விளையாட்டுப் பொருளாக மட்டும் பார்த்த மார்க்கிற்கு முறையாக அதை உபயோகப் படுத்தத் தெரியாததால், கணிணியையே வெறுத்துவிட்டான், அதன் வெளிபாடு தான் மார்க்கின் இந்த வார்த்தைகள் "என்னால இது கூட உருப்படியா எதுவும் விளையாட முடியாது"

கணிணியைக் கொண்டு உருப்படியாக எதுவும் செய்ய முடியாது என்ற மார்க்கின் வார்த்தைகளை எட்வர்ட் சிறிதும் எதிர்பார்த்திருக்வில்லை. மார்க்கையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார், சிறுவனோ விளையாட வேண்டிய அவசரத்தில் இருந்தான்.,
   
"மார்க் கணினியுடன் உனக்கு பேசத் தெரியுமா? கணினியை உனது தோழனாக்கிக் கொள்ள விருப்பமா? நான் சொல்கிறபடி கேட்டாய் என்றால், நீ சொல்கிற படியெல்லாம் உனது கணினி கேட்கும் , சம்மதமா உனக்கு? உனக்கு சம்மதம் என்றால் கணினியுடன் பேசும் அந்த  அற்புத மொழியை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்".

"கணினியுடன் பேசும்  அற்புத மொழி" இந்த வார்த்தைகள் மார்க்கை நிச்சயம் கவர்ந்திருக்க வேண்டும், தன் சிறிய விழிகளை அகல விரித்து "கணினியுடன் என்னால் பேச முடியுமா? நான் சொல்வதை எல்லாம் கணினி கேட்குமா? கணினியால் என்னுடைய தோழன் ஆக முடியுமா?" மார்க் தன் பங்கிற்கு கேள்விகளை அடுக்கினான், மீண்டும் ஒரு விஷயத்தை இங்கு நினைவுபடுத்துகிறேன், நீங்கள் கூறும் ஒரு விசயத்தை மார்க் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், மார்க் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லத் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும், இல்லை என்றால் மார்க் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.


எட்வர்ட் இந்த விசயத்தில் மார்க்கை வென்றுவிட்டார். தனது குழந்தைக்கு கணினி குறித்த வகுப்பு எடுக்க தயாரானார். உலகையே தன் வலைப்பக்கத்தின்  முன்னால் உட்கார வைத்திருக்கும் மார்க்கின் முதல் கம்ப்யூட்டர் குரு அவரது தந்தை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எட்வர்ட் தனது ஓய்வு நேரங்களில் தான் படித்த அட்டாரி பேசிக்கை மார்கிற்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அட்டரியின் நீலத்திரை மார்க்கை பெரிதும் கவர்ந்துவிட்டது. (உங்களிடம் ஒரு கேள்வி! அட்டாரியின் நீலத் திரைக்கும், பேஸ்புக்கின் நீலத் திரைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?) வெகு விரைவாக, வெகு எளிதாக அட்டாரி 800 மொழியை கற்றுக்கொண்டார் மார்க், ஒரு கட்டத்தில் அட்டாரியில் தனது தந்தையை மிஞ்சி விட்டார். எட்வர்ட் கணினி வல்லுனரோ மேதாவியோ இல்லை. கிளினிக்கில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் கணினி கற்றவர் தான் எட்வர்ட்.  

ஆனால் மார்க்கோ பத்து கி.மீட்டர் வேகத்தில் ஓடக் கற்றுக் கொடுத்தால் நூறு கி.மீட்டர் வேகத்தில் ஓடும் பிள்ளை. அட்டாரியை கற்றுக் கொண்டதும் மார்க் கூறிய பதில் "இவ்வளவு தானா இதைத் தான் அற்புத மொழி என்றீர்களா? நான் என்னவோ நினைத்து விட்டேன், சரி நான் விளையாடக் கிளம்பலாமா?". மார்க்கின் வேகத்திற்கு எட்வர்டால் ஓட முடியவில்லை, ஒன்றை நன்றாகப் புரிந்து கொண்டார், மார்க் எளிதில் கணினி கற்றுக் கொள்கிறான், அந்த ஆர்வத்தை இன்னும் மெருகேற்ற வேண்டும். 

சி++ பார் டம்மீஸ் என்ற புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னார். உபரி தகவல் : பார் டம்மீஸ் என்ற தலைப்பில் இதுவரை 2300 புத்தகங்கள் வெளிவந்த்ருகின்றன, அதில் பேஸ்புக் பார் டம்மீஸ் என்ற புத்தகமும் அடக்கம். குழந்தைப் பருவத்தில் பார் டம்மீஸ் புத்தகத்தை வழிகாட்டியாகக் கொண்டவருக்கு, அதே புத்தகத்தில் தானும் ஒரு வழிகாட்டியாய் மாறுவோம் என்பதை மார்க் சற்றும் எத்ரிபார்த்திறுக்க மாட்டார்.  

அட்டாரியை விட சி++ கொஞ்சம் பெரிய மொழி, இருந்தும் மார்க் அதையும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். இங்கே மற்றும் ஒரு சிக்கல் ஆரம்பித்தது. கணினி வாங்கிக் கொடுத்தாயிற்று,புத்தகம் வாங்கிக் கொடுத்தாயிற்று, சரி குரு எங்கே? மார்க்கிற்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுப்பது யார்? 1+1 என்று கணக்கு எழுத மார்க் சாதாரண சிறுவனா. எட்வர்டால் மார்க்கை சமாளிக்க முடியவில்லை, அவனது சந்தேகங்கள் அனைத்தும் வித்தியாசமானதாய் மிகப் பெரியதாய் இருந்தது. தேர்ந்த குரு ஒருவரின் துணை இல்லாவிட்டால் மார்க் நம்மை சும்மா விடமாட்டான் என்பதை எட்வர்ட் புரிந்துகொண்டார்.

டேவிட் நியூமன் மார்க்கின் புதிய குரு. புதிய ஓட்டம் ஆரம்பித்தது. நியூமண் கொஞ்சம் விஷயம் தெரிந்த்தவர், அவரிடம் இருந்து இன்னும் பல புதிய விசயங்களை, புதிய வழிமுறைகளை மார்க் கற்றுக் கொண்டான், மார்க்கின் வேகத்திற்கு நியூமனால் ஓட முடியவில்லை, ஓட்டத்தில் அவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டான், இத்தனைக்கும் டேவிட் நியூமன் மார்க்கிற்கு வகுப்பு எடுத்தது வாரத்திற்கு ஒருநாளே. "கணினி சார்ந்த நுட்பங்களில் தேர்ச்சி பெறுவதில் மார்க் ஒரு அற்புதக் குழந்தை, அவனுக்குக் கற்றுக் கொடுக்க என்னிடம் வேறு வித்தை இல்லை, அவன் என்னை முந்திச் சென்றுவிட்டான். டேவிட்டின் இந்த வார்த்தைகள் மார்க்கின் வாழ்க்கை ஓட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று.

மார்க் தான் கற்றுக் கொண்டதை கொண்டு என்ன செய்தான், எப்படி பரிசோதனைகள் செய்து பார்த்தான் என்று நமக்கெல்லாம் ஒரு சந்தேகம் இருக்கலாம் இல்லையா, விளையாட்டுப் பிள்ளைக்கு விளையாட்டைத் தவிர வேறு என்ன தெரியும், அந்த வயதிலேயே கம்ப்யூட்டர் கேம்சிற்கு ப்ரோக்ரம் எழுதத் தொடங்கினார் மார்க். மார்க்கின் வகுப்புத் தோழர்களில் சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம், அவர்கள் வரைந்து தரும் அந்த ஓவியகளை கணினியில் ஏற்றி அவற்றைக் கொண்டு கம்ப்யூட்டர் கேம்ஸ் எழுதுவதில் மார்க்கிற்கு அலாதி ஆர்வம்.


தான் கற்றவைகளை மார்க் இப்படித் தான் பரிசோதித்துப் பார்த்தார், மார்க்கிற்கு மிகவும் பிடித்த திரைப்படம் ஸ்டார் வார்ஸ், அதில் வரும் காட்சியமைப்புகளைக் கொண்டும் கேம்ஸ் எழுதியுள்ளார். தனது கடந்த கால நினைவுகளைப் பற்றி குறிப்பிடும் பொழுது மார்க் இந்த சம்பவங்களைப் பற்றி குறிப்பிட தவறுவதே இல்லை. 


"டாக்டர் இசட், பேஷன்ட் வந்த்ருகாறு உடனே வாங்க", எட்வர்ட் ஷக்கர்பெர்க் ரிசப்ஷனிஸ்டின் இந்த அலறல் டாஸ்பெரி நகரம் முழுவதும் எதிரொலிக்கும். எட்வர்ட்டிற்கு இது கொஞ்சம் கவுரவக் குறைச்சல் போல் தோன்றியது.

என்ன தான் டாஸ்பெரி நகரின் மிகப் பெரிய பல் மருத்துவர் என்றாலும் எட்வர்டிடம் அலைமோதும் அளவிற்கு எல்லாம் கூட்டம் வருவது கிடையாது. அவரது இல்லமும் கிளினிக்கும் ஒட்டினார்போல் இருக்கும். பேஷன்ட் யாரும் இல்லை என்றால் வீட்டிற்கு சென்று தனது கணினியை நோண்ட ஆரம்பித்து விடுவார். "டாக்டர் இசட், பேஷன்ட் வந்த்ருகாறு உடனே வாங்க" என்ற அலாரம் மிக சத்தமாக அடிக்கத் துவங்கும் பொழுது எட்வர்ட் கிளினிக் சென்று வைத்தியம் பார்த்து விட்டு மீண்டும் வீடு திரும்பிவிடுவார். 

ரிசப்சனிஸ்ட் சத்தம் ஊரையே கூட்டும் படி கேட்பதால் அக்கம்பக்கத்தார் எல்லாரும் எட்வர்டையும் அவரது ரிசப்சனிஸ்டையும் கேலி செய்யத் துவங்கினர், அவரின் கவுரவக் குறைச்சலுக்குக் காரணம் இந்த சம்பவம் தான்.

அப்பவிற்கு ஒரு பிரச்னை என்றல் மகன் களத்தில் இறங்க வேண்டாமா? அப்பாவின் பிரச்சனைக்கு தீர்வு காணத் தயாரான மார்க்கின் முதல் அறிய சாதனை தான் இன்று உலகையே கனக்டில் வைத்திருகிறது. மேலும் இதன் பின் மார்க் கண்டறிந்த ஒவ்வொர்ன்றுமே சமுகம் சார்ந்தது சமுக இணைப்பு சார்ந்தது...

பேஸ்புக் 4

"ன்னை தேடி பேஷன்ட் யாரும் வந்தால் ரிசப்ஷனிஸ்ட் என்னிடம் தகவல் கூற வேண்டும் ஆனால் சத்தம் போட்டு ஊரையே கூப்பிடக்கூடாது , உன்னால் முடியுமா?, உன்னிடம் ஏதேனும் வழி இருக்கிறதா", எட்வர்ட் மார்கிடம் தனது பிரச்சனையைக் விளக்கிக் கொண்டிருந்தார்.

"து தான் உங்க பிரச்சனையா, இதற்காகத் தான் இவ்ளோ கவலைப்படுறீங்களா", மார்க் சிரித்துக் கொண்டே கேட்டான். எட்வர்ட் எதுவும் கூறமால் அமைதியாக மார்க்கைப் பார்த்துக் கொண்டு இருந்தார், மார்க் தொடர்ந்தான்.
"வீட்டில் இருக்கும் உங்க கம்ப்யூட்டரையும், ரிசப்சனிஸ்ட் கம்ப்யூட்டரையும் கனெக்ட் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணுங்க மத்த விசயத்த நான் பார்த்துக்குறேன்"

மார்க் கூறியது முதலில் எட்வர்டிற்குப் புரியவில்லை, ஒருவித குழப்பத்துடன் தன வீட்டில் இருக்கும் அனைத்துக் கணினிகளையும் இணைக்கும் வேலைகளை ஆரம்பித்தார். இந்நேரத்தில் மார்க்கும் தான் மேற்கொண்டிருந்த வேலையை வெற்றிகரமாக முடித்திருந்தான். மார்க் செய்த செயல் சாதாரண விஷயம் இல்லை, அவனது பதினோரு வயதில் தனது தந்தைக்காக மென்பொருள் ஒன்றை வடிவமைத்து இருந்தான். அந்த மென்பொருள் மூலம் தன் வீட்டில் இருக்கும் அத்தனை கம்ப்யூட்டருடனும் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும் என்பதே அதன் சிறப்பம்சம்.

"டாக்டர் இசட் உங்கள தேடி பேசன்ட் வந்த்ருகாங்க உடனே வரவும்" என்ற ரிசப்ஷனிஸ்டின் தகவலை தனது கணினியில் பார்த்ததும் எட்வர்டால் அந்த சிறுவனை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. மார்க் தான் கண்டுபிடித்திருந்த அந்த மென்பொருளுக்கு வாய்த்த பெயர் ZUCKNET. மார்க்கின் முதல் மற்றும் முக்கியமான கண்டுபிடிப்பு, இதன் பின் தான் மார்க்கின் திறமை மீது முழு நம்பிக்கை வந்ததாக அவரது சகோதரி ராண்டி பெருமையுடன் குறிப்பிடுகிறார். ZUCKNET இன் வருகைக்குப் பின் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் அதன் மூலமே தகவல் பரமாரிக் கொண்டனர்.
மார்க்கின் குடும்பம் மிகப் பெரிய குடும்பமோ அல்லது பணக்காரக் குடும்பமோ கிடையாது, மத்தியதரக் குடும்பம். இருந்தும் மார்கிற்குக் கணினி மீதிருந்த ஈடுபாடு குறைந்துவிடக் கூடாது, மேலும் மேலும் அவனது திறமை வளர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்ட அவனது பெற்றோர் எட்வர்டும் கேரனும் அவனுக்கு சிறப்பான கல்வி கிடைக்கப் பெற  வேண்டும் என்று  முடிவு செய்திருந்தனர். குடும்பம் கஷ்டபட்டாலும் பரவாயில்லை மார்க்கிற்கு நல்ல தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று நினைத்தனர். அவர்கள் வீட்டின் அருகில் மெர்சி என்னும் கல்லூரி இருந்தது, அதில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கணினி வகுப்புகள் நடைபெறும் என்பதை எட்வர்ட் கேள்விபட்டிருந்ததால், மார்க்கை அந்த கல்லூரியில் சேர்ப்பதற்காக அழைத்துச் சென்றார். 

குப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது, எட்வர்ட் தனது மகனுடன் வகுப்பினுள் நுழைந்த நேரம், பாடம் நடத்திக் கொண்டிருந்த ப்ரோபசர் எட்வர்டை நோக்கி,  
" ஹலோ மிஸ்டர், கிளாஸ்க்கு வாறதா இருந்தா நீங்க மட்டும் தனியா வரணும், கூட ஏன் சின்ன பையன எல்லாம் கூட்டிட்டு வாறீங்க, மொதல்ல அவன போய் வீட்டில விட்டுட்டு வாங்க" 

ட்வர்ட அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே, " ஹலோ ப்ரோபசர், ஸ்டுடென்ட் நான் இல்ல, இதோ நிக்ரானே என் பையன் மார்க் அவன் தான் ஸ்டுடென்ட், நான் சும்மா அவன் கூட வந்தேன், நான் வேணா வெளியில இருக்கேன்" என்று கூறிவிட்டு அறையை விட்டு அகன்றார். தன பையனைப் பற்றி பெருமையாகக் குறிப்பிடும் தருணங்களில் இந்த நிகழ்வை மிக முக்கியமான ஒன்றாக கருதுகிறார் எட்வர்ட். 


னது வீட்டின் அருகில் இருக்கும் அர்ட்ஸ்லீ என்னும் சாதரான பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மார்க்கை பிலிப் எக்ஸ்ட்டர் அகாடெமி என்னும் மிகப் பெரிய பள்ளியில் சேர்த்தார். பள்ளி சிறியதோ பெரியதோ அதைப் பற்றி எல்லாம் மார்க் கவலைப்படுவதே கிடையாது, தான் கற்கும் பாடங்களை முறையாக படிக்க வேண்டும் என்பது மட்டுமே அவனது குறிக்கோள். பிலிப் எக்ஸ்ட்டர் அகாடெமியில் அணைத்து பாடங்களிலும் மார்க் முதன்மையான மாணவனாக திகழ்ந்தான், பழங்கால மொழிகளைக் கற்பதில் மார்க்கிற்கு அலாதி ஆர்வம், ஆங்கிலம் தவிர மார்க்கிற்கு பிரெஞ்சு, ஹீப்ரு, லத்தீன், கிரேக் போன்ற மொழிகள் தெரியும் (தற்போது தனது காதல் மனைவிக்காக சீன மொழியிலும் புலமை பெற்று வருகிறார்). மேலும் கணிதம் ஜோதிடம் மற்றும் இயற்பியல் பாடங்களில் அதிக மதிப்பெண் வாங்கியதற்காக பரிசுகளும் பெற்றுள்ளார்.

டிப்பு தவிர்த்து விளையாட்டுகளிலும் மார்க்கிற்கு ஆர்வம் அதிகம். பென்சிங் எனும் வாட்போர் விளையாட்டில் அவரது பள்ளியின் பென்சிங் அணி  கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.  

பிலிப் எக்ஸ்ட்டர் அகாடெமியின் இறுதி ஆண்டில் ஒவ்வொரு மாணவரும் ப்ராஜெக்ட் செய்ய வேண்டும், தனியாகவோ அல்லது இரண்டு மூன்று பேர் சேர்ந்த குழுவாகவோ இணைந்து செய்யலாம், மார்க் தனது நண்பன் ஒருவருடன் சேர்ந்து செய்ய முடிவு செய்தார், அந்த ப்ராஜெக்ட் அமெரிக்க இசை உலகையே ஆச்சரியப்பட வைத்தது, மைக்ரோசாப்ட் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் பல லட்சம் டாலர்கள் கொடுத்து அந்த ப்ரொஜெக்ட்டையும் மார்க்கையும் விலை கொடுத்து வாங்கப் பார்த்தனர்.

பேஸ்புக் 2

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின்
ஒழுங்கு நிர்வாகக் கமிட்டியிடம் இருந்து வந்திருந்த கடிதத்தை மார்க் ஒரு பொருட்டாகவே கருதவில்லை அவரைப் பொறுத்த வரை அந்தக் கூட்டத்தை ஏதோ ஒரு கலந்தாய்வுக் கூட்டம் போல் கருதினார். தன் மீது சுமத்தப் பட்டிருந்த குற்றங்களைப் பற்றி அவர் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு விஷயம் தன் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றங்களை இறைவனே நினைத்தாலும் மறைக்க முடியாத விதமாக நல்ல காரியம் ஒன்றையும் மிகத் தெளிவாக செய்திருந்தார் மார்க். சிறிது குழப்பமாக இருக்கிறதா! புரிதலுக்காக மார்க் வடிவமைத்த பேஸ்மேஸினுள் மீண்டும் ஒருமுறை நுழைந்து விடுவோம்.
பேஸ்மேஸ் என்றொரு பூதம் தன்
கல்லூரி வாழ்கைக்கே உலை வைக்கப் போகிறது என்பதை அறியாத மார்க் அதற்கான வாக்குமூலத்தையும் தன கையால் தானே எழுதுவார் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். பேஸ்மேஸ் விளையாடுவது எப்படி என்று அமெரிக்கர்கள் யாருக்கும் சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் தான் வடிவமைத்த "பேஸ்மேஸ் Am I Hot Or Not" என்னும் இணைய விளையாட்டை எத்தனை சவால்களுடன் வடிவமைத்தார் என்ற விஷயத்தை மக்களுக்கு சொல்லியாக வேண்டுமே! அதில் தானே இருக்கிறது தனது உழைப்பிற்கான அங்கீகாரம்! தனது பேஸ்மேஸ் இணையதளத்தில் தான் எப்படி ஹாட் ஆர் நாட் விளையாட்டை வடிவமைத்தார் என்றும், எப்படி எல்லாம் படங்களை தரவிறக்கம் செய்தார் என்றும் தன்னால் தரவிறக்கம் செய்ய முடியாத விடுதிகளில் இருந்து படங்களை தரவிறக்கம் செய்ய எந்த எந்த நண்பர்கள் எவ்வாறு எல்லாம் உதவினார்கள் என்றும் மிகத் தெளிவாக எழுதி இருந்தார் மார்க். தனக்கு உதவிய நண்பர்களின் பெயர் முதல்கொண்டு எழுதி இருந்தார். மார்க்கிற்கு எதிராக எத்தனையோ ஆதாரங்கள் இருந்தும் இந்த ஒரு ஆதாரம் போதாதா மார்க் குற்றவாளி என்று நிருபிக்க.


ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் கறுப்பின பெண்கள் குழு(!) மார்க் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்பதில் மிகத் தெளிவாகவும் மிக உறுதியாகவும் இருந்தது. காரணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் தான். கல்லூரி நிர்வாகமும் அதையே தனது குற்றச்சாட்டுகளில் ஒன்றாக சேர்ந்து இருந்தது. மார்க் கமிட்டி முன்பு ஆஜராகும் நாளை கல்லூரியே ஆவலுடன் எதிபார்த்துக் கொண்டிருந்ததது. 

வம்பர் பதினெட்டு நண்பகல் ஹார்வர்டின் ஒழுங்கு நிர்வாகக் கமிட்டி முன்னால் மார்க் ஆஜராகி இருந்தார். நீதிமன்றத்தில் எப்படி விசாரனை நடைபெறுமோ அதுபோல் தான் ஒழுங்குக் கமிட்டியின் முன்பும் விசாரணை நடைபெறும். இங்கே தனக்காக வாதாடுபரை நியமிப்பதும் நியமிக்காத்தும் குற்றம் சுமத்தப்பட்டவரின் தனிப்பட்ட விருப்பம். மார்க் தனக்காக வாதாட தன்னையே நியமித்துக் கொண்டார். 

மார்க்கை வக்கீல் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்பது தான் அவரது தந்தை எட்வர்ட் ஜக்கர்பெர்க்கின் ஆசை. எட்வர்ட் தனது மகன் மார்க்கைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார் மார்க் ஒரு விஷயம் பற்றியோ, ஒரு பொருள் பற்றியோ விவாதம் செய்ய ஆரம்பித்தால் அவரிடம் மறுத்துப் பேசுவது என்பது அசாதாரணமான காரியம். மார்கிடம் "இல்லை" என்று சொல்லும் முன் அந்தப் பொருளைப் பற்றிய நுண்ணறிவு, அதனைப் பற்றிய அனுபவங்கள், அந்தப் பொருளால் ஏற்படும் நன்மை தீமைகள் என்று என்னவெல்லாம் காரணங்கள் சொல்ல முடியுமோ அத்தனையும் சொல்ல வேண்டும் இல்லை என்றால் மார்க் உங்களை வென்று விடுவான். எதையும் தீர ஆராயும் பழக்கம் மார்க்கிற்கு சிறு வயது முதலே இருந்ததால் அவரை வக்கீலாக்கிப் பார்க்க வேண்டும் என்று அவரது குடும்பம் நினைத்ததில் வியப்பேதும் இல்லையே. 

"மிஸ்டர் மார்க் உங்கள் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றங்கள் அனைத்தும் ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகம் உங்களை டிஸ்மிஸ் செய்வதற்கான காரணங்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக உள்ளது. உங்கள் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றங்களைப் பற்றி நீங்கள் விளக்க நினைத்தால் விளக்கலாம்". ஹார்வர்ட் ஒழுங்கு நிர்வாகக் கமிட்டி.

மார்க் " என் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றங்கள் எதையும் நான் மறுக்கப் போவதில்லை, அதே நேரத்தில் என் மீது சுமத்தப் பட்டிருக்கும் அத்தனை குற்றங்களிலில் நியாயமும் இல்லை. நான் ஒரு கணினித் துறை சார்ந்த மாணவன், அதனால் இது போன்ற ப்ரோஜெக்ட்டுகள் செய்து பார்ப்பதில் தவறு இல்லை, அதே நேரத்தில் இது என்னுடைய முதல் ப்ரொஜெக்ட்டும் இல்லை. இது போன்ற பல ப்ரோஜெக்ட்டுகள் செய்து பார்ப்பது தான் என்னுடைய பொழுதுபோக்கு அப்படி முயன்று பார்த்த ஒன்று தான் இந்த பேஸ்மேஸ் , இந்த அளவிற்கு பேசப்படும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை



ந்தப் புகைப்படங்களை வைத்தோ அல்லது இந்த இணையத்தை வைத்தோ காசு சம்பாதிக்கும் எண்ணம் எனக்கு சிறிதும் இல்லை. இது ஒரு சிக்கலான பார்முலா உடைய விளையாட்டு இதனை வெற்றிகரமா செய்து பார்ப்பது என்பது சவாலான விஷயம். மூளைக்கு வேலை கொடுக்கும் படியான இந்தப் ப்ராஜெக்ட் ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று சோதனை செய்து பார்பதற்காக மட்டுமே எனது நண்பர்களுக்கு அனுப்பினேன். . விளையாட்டு அவர்களுக்குப் பிடித்துப் போகவே அவர்கள் மற்றவர்களுக்கு அதன் லிங்கை அனுப்பி விட்டனர். இது நான் சற்றும் எதிர்பாராத ஒரு விஷயம். குறைந்த கால அளவில் இத்தனை பேர் இதனை விளையாடிப் பார்பார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேலும் இந்த இணையம் மூலம் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கவே அதனை நான் உடனே செயல் இழக்கச் செய்துவிட்டேன். 




டுத்தது புகைப்படங்கள். பழக்கம் இல்லாத பிரபலங்கள் முகங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்கு தங்கள் உடன் பயிலும் மாணவர்கள் முகங்களைப் பார்த்ததும் பிடித்துப் போய்விட்டது, அது மட்டுமே இந்த விளையாட்டின் வெற்றியாக இருக்க முடியும், அதே நேரத்தில் சக மாணவர்களை நான் அவமதிப்பது போல் உணர்ந்தார்கள் என்றால் அவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்கத் தயார்.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் புகைப்படங்களை திருடியதாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்த இந்தப் தகவல்களை தவறான காரியத்திற்கு உபயோகிக்க வில்லை. கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனால் மிகப் பெரிய கல்லூரியின் தளத்தில் இருந்து ஹாக் செய்ய முடியும் என்றால் இதனை குற்றமாகப் பார்க்காதீர்கள் எச்சரிக்கையாகப் பாருங்கள். கல்லூரியின் இணையப் பாதுகாப்பு மிக மோசமான நிலையில் உள்ளது அதனை சரி செய்ய வேண்டும் என்ற கோணத்தில் பாருங்கள்". 

மார்க் தனது வாதங்களை கூறி முடித்தார்.

ஹார்வர்டின் ஒழுங்கு நிவாகக் கமிட்டி மார்க்கை அதிசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. குற்றங்களை அனைத்தையும் மறந்து அவரது வாதத் திறமையை எண்ணி வியந்தது. நிச்சயமாக புத்திசாலித்தனமான வாதம். பல்கலைகழகத்தின் இணையப் பாதுகாப்பின் கேள்விக்குறியை நிர்வாகம் ஒத்துக்கொண்டது. அதே நேரத்தில் தான் செய்த மார்க் மன்னிப்பு கேட்க தயாராக இருந்ததால் அவரை டிஸ்மிஸ் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டு குறைந்தபட்ச தண்டனை கொடுக்க நிர்வாகம் முன்வந்தது. 

றுநாள் நவம்பர் பத்தொன்பதாம் தேதி ஹார்வர்ட் பல்கலைகழக இதழான "க்ரிம்சனில்" பேஸ்மேஸ் பற்றியும் மார்க் பற்றியும் விரிவான கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது.மார்கிற்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் இது.

Sunday, December 2, 2012

மாயன் நாகரிகம்






பல நூற்றாண்டுகளுக்கு முன், தெளிவற்ற காரணத்தோடு, ஒரு இனம் உலகின் பார்வையிலிருந்து காணாமற் போகிறது. அந்த இனத்தின் பெயர் மாயா. அவர்கள் எங்கே போனார்கள் என்ற காரணம் யாருக்கும் தெரியவில்லை. நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த கோவிலின் வேலைபாடுகள் நிறைவடைய வில்லை. சிலைகள் பாதியாய் ஊருவம் வாங்கி நிற்கின்றன. அனைத்துக் கட்டுமாணங்களும் பாழடைந்து புதைந்து கொண்டிருக்கிறது.



வேண்டுதல்களும், மாய மந்திர வேலைகளும் நின்றுவிட்டது. அன்று முதல், இவ்வினத்தின் மூதாதைகளின் புத்திசாலிதனமும், கற்பித்தலும் காற்றோடு கலந்துவிட்டது. மிச்சம் மீதி இருந்த மாயா இனத்தவர்களுக்கு எழுத்தின் மீதும் படிப்பறிவின் மீதும் கண் பார்வையற்று போயிற்று. அவர்களுக்கு வாழ்க்கை நேறியும் மறந்து போயிற்று. அவ்வினம் மிருகத்தன்மையை அடைந்தது. மேற் கூறியவை மெக்ஸிகோ நாட்டின் காட்டுப் பகுதியில் மர்மமாய் தோன்றி மறைந்த மாயா நாகரிக அராய்ச்சியாளர்களின் அறிக்கை.



1000 வருடங்களுக்கும் மேலாக இவ்வளவு ஆச்சரியமும், அற்புதமும் நிறைந்த நாகரிகம் புதைந்து கிடந்த்தை யாரும் கண்டறியவில்லை. 1839-ஆம் ஆண்டு, அமேரிக்காவை சேர்ந்த எழுத்தாளரான John Lloyd Stephens தமது உதவியாளர் ஒருவரின் துணையோடு அங்கே செல்கிறார். பாழடைந்த பழமைமிக்க நகர பகுதி அங்கே உதித்து மறைந்ததை அவர் கண்டுபிடிக்கிறார்.



பல்லாயிரம் ஆண்டுகாலமாக செடிகொடிகள் படர்ந்திருந்த கட்டிடங்கள் கலைதிறன் மிக்க வேலைபாடுகளோடு உறுதியோடு இருக்கக் காண்கிறார். அடுத்ததாக அவர் ஒரு விசித்திரத்தை காண்கிறார். அவ்விடத்தில் மனிதர்கள் யாரையும் காண முடியவில்லை. நீண்ட காலமாக அவ்விடம் நாதியற்று கிடந்திருக்கிறது.



அன்று முதல் அவ்விடம் ஆராய்ச்சிக்குள்ளாகிறது. ஆராய்ச்சியின் மேல் ஆராய்ச்சிகள் நடந்து புதைந்து போன மாயா இனத்தவரின் வரலாற்றைத் தோண்டி எடுக்கிறார்கள். மாய இனத்தவர்கள் ஆச்சரியமிக்க நாகரிகத்தை உருவாகியுள்ளார்கள், பலப் பல துறைகளில் அறிவு திறன்மிக்கவர்களாக திகழ்திருக்கிறார்கள். இவையாவும் உலக நாகரிகம் வளர்ராத காலத்தில் நடந்தவை.



இந்த கண்டுபிடிப்பின் மகிழ்ச்சியில், ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு விந்தையும் உதித்தது. ஒரு நகரத்தை வளர்ச்சியடைய செய்து பின்னர் எதற்காக அதைவிட்டு மறைந்தார்கள் என்பதே அவர்களின் வியப்பாகும். 





மாயா இனத்தவர்கள், அவர்களின் பொற்காலத்தின் போது உலகிற்குப் பயனுள்ள பல துறைகளின் நுணுக்கங்களை ஆராய்ந்திருக்கிறார்கள், கலைத்திறனும் புத்திக் கூர்மையும் பெற்று விளங்கினார்கள். 16-ம் நூற்றாண்டின் போது தென் அமேரிக்கப் பகுதியை ஆட்சி செய்த ஸ்பெயின் நாட்டினரின் கடுமையான தாக்குதலால் இப்பகுதி அழிந்து போனது. அவர்களின் கண்டுபிடிப்பும் எழுதிய நூல்களும் அச்சமயம் அழிக்கப்பட்டது.



இச்செயல் உலகிற்கு மாயா இனத்தவரை பற்றிய பல உண்மைகளை உணர்த்த முடியாமலும் செய்துவிட்டது. அது நமக்கு பெரும் நஷ்டமும் கூட. தற்சமயம் நமக்கு வெளிபடையாக கிடைத்திருப்பது அந்நாகரித்தை பற்றிய சிறு துளியளவு கண்டுபிடிப்புகள் மட்டுமே. இவையாவும் அவ்விடத்தில் கிடைக்கப் பெற்ற சில துண்டு எழுத்துகளின் வடிவில் கிடைத்தவையாகும்.



இந்த மர்ம நகரில் பெரும் கற்களைக் கொண்ட கட்டிட வேலைபாடுகள் உள்ளன, பெரிய அளவிளான நகர வடிவமைப்பு, எழுத்துக்கள், மற்றும் அறிவு நுணுக்கங்கள் மாயா இனத்தவரின் போற்றதக்க கலைத்திறன்களாகும். இவை தற்போதய தொழில்நுட்பத்தைவிடவும் மேலானவையாகவே கருதப்படுகிறது.



எகிப்தியப் பிரமிடுகளை அடுத்து இந்நகரில் காணப்படும் பிரமிடுகளே பிரசித்தி பெற்று விளங்குகிறது. இப்பிரமிடுகளை சுற்றிலும் 4 பெரிய படிகட்டுகளும் அவற்றுள் அடங்கிய 365 படிக்கட்டுகளும் காணபடுகிறது. இவையாவும் ஒரு ஆண்டிற்கான 4 காலங்களையும் 365 நாட்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது. 



இந்நிலை மாயா இனத்தவரின் வான் ஆராய்ச்சி நுட்பத்தை குறிக்கிறது. இதைத் தவிர்த்து கட்டிடங்களின் உட்புறமும் வெளிப்புறமும் பல வகையான எண்களால், வான் மாற்றங்களை பற்றிய விடயங்கள் செதுக்கப்பட்டிருக்கிறது.



மாயாக்களால் எப்படி அசாத்தியமிக்க கட்டிடங்களை எழுப்ப முடிந்தது? அதுவும் அடர்ந்த காட்டிற்குள்? இவர்களது கட்டிடங்கள் ‘டன்’ கணக்கிலான கற்களை கொண்டு அந்த மர்ம நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாயக்கள் இப்பெரிய கற்களை அடர்ந்த காட்டிற்குள் கொண்டு வந்ததும், அவற்றை சரிவர அடுக்கி கட்டிடங்களையும் பிரமிடுகளையும் அமைத்துள்ளதும் ஆச்சரியமிக்கவையாகும். மாயாக்கள் எவ்விதமான தொழில்நுட்பத்தை கையாண்டு இத்தகய நகரத்தை அமைத்தார்கள் என்பதும் கோள்விக்குறியே.

அராய்ச்சியாளர்கள் மாயாக்களின் நாகரிகம் கி.மு. 2000-ஆம் ஆண்டில் தொடங்கி சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். கி.மு 2000 முதல் 250 வரை வளர்ச்சிக் காலமாகவும், 250 தொடங்கி 900 வரை மாயாக்களின் பொற்காலமாகவும் கருதப்படுகிறது. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகள் மாயாக்களின் உச்சகட்டப் பொற்காலம் எனவும் கூறுகிறார்கள்.



900-ஆம் ஆண்டில், நாகரிக உச்சத்தை அடைந்த பின் மாயாக்களின் ஆதிக்கம் மர்மமாய் மறைந்ததாய் கூறுகிறார்கள். அனாலும் இது முற்றிலும் உண்மையாகாது. ஆரம்ப காலத்தில் மாயாக்கள் மறைந்து போன மர்மத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்குக் காரணம் மாயா நகரப் பகுதி குடிகள் இல்லாமல் நாதியற்றுக் கிடந்தது தான். 



இதன் பின் ஆராய்ச்சியாளர்கள், மாயாக்களின் வம்சாவழியினர் தென் அமேரிக்க பகுதிகளில் இன்றளவும் வாழ்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் மாயாக்களில் பல பிரிவினர் இருந்ததாகவும் அவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே இவர்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள்.



மாயாக்களின் மறைவிற்கு இயற்கை சீற்றங்களே முக்கியக் காரணம் என கூறுகிறார்கள். மாயாக்களின் கலைத் திறன் மிகவும் நுட்பமானது, சிற்பக் கலையும் வரையும் திறனும் இவர்கள் விட்டுச் சென்ற அற்புத பொக்கிஷங்களின் வடிவில் இன்றளவும் நம்மால் காண முடிகிறது. கட்டிட கலையும் இவற்றுள் அடங்கும். மாயாக்களால் Tikal, Palenque, Copan, Kalakmul, Dos Pilas, Uaxactun, Altun Ha போன்ற நகரங்கள் மிகவும் திறம்பட உருவாக்கப்பட்டுள்ளது.



இவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது பிரமிடும் அரண்மனையும் ஆகும். மாயா நகர பகுதியில் காணப்படும் stelae எனப்படும் கல் வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற வெற்றி மற்றும் பல முக்கிய தகவல்கள் heiroglyphik எழுத்துவடிவில் செதுக்கப்பட்டுள்ளது. மாயாக்கள் தூர தேச வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்ட உண்மை.



Bonamak என்ற இடத்தில் அமைந்த மாயாக்களின் சிற்ப கலைகள் எவ்விதப் பாதிப்பும் இன்றி கிடைக்கப் பெற்றதால் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை முறையாகத் தங்களது ஆய்விற்குப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இச்சிற்பங்கள் மாயாக்களின் நாகரிக வளர்ச்சியைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.



மாயாக்களின் எழுத்தின் அடிப்படையில், இச்சிற்பங்களை வடிவமைத்தவர்கள் தங்களது பெயரை சிற்பத்தின் எதாவது ஒரு இடத்தில் பொறித்துள்ளார்கள். இதனால் சிற்பிகள் மாயாக்களின் காலத்தில் பேற்றதக்கவர்களாக மதிப்பளிக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிய முடிகிறது. சிற்பகலை வருங்கால சந்ததியினருக்கு இவர்களின் சரித்திரத்தை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என முன்னதாகவே இவர்கள் அறிந்திருக்கின்றனர்.



மாயாக்களால் நுட்பமாய் செய்யப்பட்டிருக்கும் கட்டிடங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாயினும் உறுதியாகவே இருக்கின்றன. பிரமிடு, வழிபாட்டு இடங்கள் மற்றும் வியாபார தளங்கள் இந்நாகரிக வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்துள்ளன. இவையே ஆராய்ச்சியாளர்கள் மாயா நாகரிகத்தை அறிந்து கொள்ளச் சிறந்த தடயமாய் அமைந்தது.


   



மாயாக்கள் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைத்துள்ளார்கள். பிரமிடுகள் உயரமான மலை பாங்கான இடத்தில் அமைந்திருக்கும் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைப்பதால் இறைவன் இருக்கும் சொர்க வாசலை அவர்கள் சுலபமாக நெருங்க முடிவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர் .



ஆராய்ச்சியாளார்களின் கவனத்தை ஈர்த்த இன்னோரு விசயம் மாயாக்களின் விளையாட்டு மையம். ஒவ்வோரு மாயா நகர பகுதிகளிலும் மிகப் பெரிய பந்து விளையாட்டு மைதானம் காணப்படுகிறது. இம்மைதானங்கள் ஆங்கில எழுத்தின் ‘I’ ‘ஐ’ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

  



மாயாக்களின் எழுத்து வகைகள் நீண்ட நாட்கள் ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் இருந்தவையாகும். 19-ஆம் நூற்றாண்டில் மாயா நகர பகுதி கண்டுபிடிக்கப்பட்டது 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவையாவும் புரியாத புதிராகவே இருந்தது. 



1960 முதல் 1970 வரையில் அனைத்து எழுத்துக்களுக்கும் அர்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்டன. இதன் வழி ‘ஸ்பெயின்’ நாட்டினரின் படையெடுப்பும், பல்லாயிர காணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டதும் வருத்தத்துடன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் 4 புனித நூல்களில் மூன்றும் நான்காம் நூலின் சில பக்கங்களும் மட்டுமே கிடைத்துள்ளது. இந்திய நாகரிகத்தை அடுத்து மாயாக்களும் ‘0′ பூஜியத்தை கணக்கு வழக்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் 0 முதல் 20 வரையிலான எண் வகைகளை அமல்படுத்தியிருக்கிறார்கள். கல்வெட்டுகளில் இவர்கள் லட்சம் வரையில் கணக்கு வழக்குகளை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். அவை பெரும்பாலும் வான் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிரகங்களின் அசைவுகளும், வான் நிகழ்வுகளும் துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளன.
இன ஒழிப்பு இன்னமும் நடந்தேறிக் கொண்டிருக்கும் சமாசாரம் என்றே கூற வேண்டும். உண்மையில் ஒரு இனத்தைப் பூண்டோடு அழித்துவிடுவது என்பது சாத்தியமற்றது. மாயாக்கள் விசித்திர குணாதிசயங்கள் கொண்ட மனித இனம். தென் அமேரிக்க பகுதியின் வாழ்ந்த இவ்வினம் இப்போது இல்லை. மாயாக்கள் அழிக்கப்பட்டார்களா, அழிந்து போனார்களா அல்லது மறைந்து போனார்களா?



அவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. ஆரம்ப காலம் முதல் பல முறை ஸ்பெயின் நாட்டினர் அங்கு படையெடுத்து இருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது அவர்களுக்கு மாயக்களின் நுட்ப ஆய்வுகளை அறியும் ஆவல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மாயாக்களின் வாழ்வியல் முறை அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம்.



மாயாக்களிடம் கட்டிடக் கலை, கணித, சமய நுட்பங்கள் அபரிமிதமாகவே இருந்திருக்கின்றன. ஸ்பெயின் சிப்பாய்களிடம் போர் கருவிகள் அதிகமாக இருந்தன. மாயாக்களிடம் நவீனப் போர் கருவிகள் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் செற்பம். மாயாக்கள் வாழ்ந்த காடு, அவர்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் கைப்பற்றுவதற்காக அவர்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.



மாயாக்களின் கண்டுபிடிப்புகள் பல. அவற்றில் குறிப்பிடத்தக்கது வான்கணித முறைகள். அவற்றின் அடிப்படையில் உருவானதே மாயக்களின் நாட்காட்டி. மாயாக்களின் நாட்காட்டி இரகசியம் மிகுந்ததா? "இல்லை, அது விளங்காத ஒன்று" என்றே பலரும் சொல்வார்கள்.



புரியாத ஒன்றை வைத்து பல குளறுபடிகள் செய்கிறார்கள், கணிப்புகள் செய்கிறார்கள், இறுதியில் ஏதோ ஒரு முடிவு கட்டி இது தான் அது என சொல்லிவிடுகிறார்கள், எல்லாம் பிசகு, பொய் புரட்டு நிறைந்து கிடக்கிறது, என சிலர் அவற்றை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். சில பழமை நிகழ்வுக்கான காரணங்களைக் கண்டறிவதும் ஒரு சுகம் தான்.



மாயாக்களின் நாள்காட்டியில் ஒரு விசித்திரத்தைக் கண்டார்கள் ஆய்வாளர்கள். அந்த நாள்காட்டி 21 டிசம்பர் 2012-ஆம் ஆண்டு நிறைவடைகிறது. கி.மு 3113-ஆம் ஆண்டு அந்நாள்காட்டி தொடக்க ஆண்டாக அமைகிறது. இது முழுமை பெறாத நாள்காட்டியா? அல்லது மாயாக்களின் மறுபட்ட கணிப்பு முறையில் கண்டறியப்பட்டவையா?



அது என்ன மாயாக்களின் கணக்கு? அவர்களின் கணித முறை இப்படி விரிகிறது. கின், உனியல், துன், கதுன், பக்துன், பிக்துன், கலப்துன்.

நாள் என்பதை அவர்கள் கின் எனக் குறிக்கிறார்கள்.

19 கின் (19 நாள்)= 1 உனியல்
359 நாள் = 1 துன்
7200 நாள் = 1 கதுன்
144 002 நாள் = 1 பக்துன்
1 872 025 நாள் = 13 பக்துன்
2 880 025 நாள் = 1 பிக்துன்
57 600 025 நாள் = 1 கலப்துன்

இந்த கணக்கியல் முறை இப்படி வியப்பளிப்பதாக இருக்கலாம். மாயாக்களின் நாள்காட்டி இயற்கை மாற்றங்கள் மற்றும் சீற்றங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இவையாவும் இரு முக்கிய புத்தகங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அப்புத்தகங்கள் 'கொடெக்ஸ்' என அழைக்கப்படுகிறது. கொடெக்ஸ் பூமியை மட்டுமன்றி கோள் மாற்றங்களின் குறிப்புகளும் உள்ளடங்கியது. கோடெக்ஸ் வான் நிபுண மாயாக்களால் எழுதப்பட்டதாக அறியமுடிகிறது.



மாயா வகுப்பை சேர்ந்த வான் நிபுணர்கள் மாய மந்திர வேலைகள் கைதேர்ந்தவர்கள். அப்படியானால் இந்நாள்காட்டியின் நம்பகத்தன்மை எவ்வகையது எனும் கேள்வி நம்முள் எழுவது சாத்தியமாகிறது. ஆரம்ப கால வாழ்க்கையில் மனிதன் ஏதோ ஒரு வகையில் இயற்கையை சார்ந்தே வாழ்ந்திருக்கிறான். ஆதாலால் இயற்கையை போற்றும் வண்ணம் இம்மாதிரியான மாய மந்திர வேலைகள் ஏற்பட்டிருக்கலாம்.



கோடெக்ஸ், கணிதமும் சிறு சிறு சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும் புத்தகம். அச்சிறு சிறு எழுத்து வகைகளை ஹிரோகிலிஃப் எழுத்துகள் என அறிகிறோம். அந்த எழுத்துகள் எப்படி அமைந்திருக்கின்றன? பூமியில் உள்ள மனிதன் ஆகாயத்தில் இருக்கும் உயிரினங்களோடு தொடர்பு கொள்வது போலும், அவர்களுடைய கடவுளர்களோடு பேசுவது போலவும் உள்ளன.



இந்நாள்காட்டி கி.மு 20 செப்டம்பர் 3113-ஆம் திகதியில் தொடங்குகிறது. இக்காலகட்டம் மாயாக்களின் காலமென அழைக்கப்படுகிறது. அவர்களின் நம்பிக்கைப்படி இவ்வுலகம் புதுபிக்கப்படும். அப்படி புதுபிக்கப்படும் நாளானது மனித சரித்திரத்தில் முக்கிய நாளாக அமையும்.



கோள்களின் இட மாற்றமும் பூமியின் கால மாற்றமும் மனித வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு பாதிப்பை விளைவிற்கின்றன என்பது இவர்களின் கருத்தாகும். பூர்வ கால எகிப்திய மக்களிடையேயும் இவ்வகை நம்பிக்கை இருப்பதை நாம் காண முடிகிறது. Asy Syi'ra நட்சத்திரம் நைல் நதியை கடக்கும் வேளையில் தீமைகள் விளையும் எனும் நம்பிக்கையை கொண்டிருந்தார்கள் அவர்கள்.



21 டிசம்பர் 2012 End of Times என ஆய்வாலர்களாலும் அறிஞர்களாலும் குறிப்பிடபடுகிறது. இந்த End of Times எனும் சொல்லுக்காகன விவாதங்கள் இன்னமும் மள்ளுக்கட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. எடுத்த எடுப்பில் அதுதான் பூமியின் இறுதி நாள் என சொல்லிவிடுவோர் பலர் உண்டு. ஆனால் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் பார்வையில் அச்செற்களுக்கான ஆய்வுகள் ஆழமானவை. அவற்றில் வேடிக்கையான சில சேதிகளும் உண்டு.



பூமி சுற்றுவது நின்றுவிடும் ( கால நேர மாற்றம் இருக்காது), காலம் Pisces எனப்படும் மீனத்தில் ஒரு சுற்று முடிந்து Aquarius எனப்படும் மேஷத்தில் ஆரம்பமாகப் போகும் நாள், உலகம் வெள்ளி நூற்றாண்டில் இருந்து தங்க நூற்றாண்டிற்கு மாற்றம் காண்கிறது, அதீதமான இயற்கைச் சீற்றம் ஏற்பட்டு உலகில் மாற்றங்கள் உறுவாகும், உலகைக் காக்க கடவுளர் எழும் நாள், காலம் பின்நோக்கி நகரும், வேற்றுக் கிரக வாசிகளோடு தொடர்பு உண்டாகும் நாள்.



அத்திகதியை பற்றிய மேற்காணும் விடயங்கள் நகைப்புக்குறியவை. தமிழில் செலுத்தப்பட்ட ஆரிய கதைகளைப் போலவே மனிதர்களின் மனதில் மடத்தனத்தை உட்புகுத்துபவை.



இன்று எழுதப்படுபவனவற்றில் சில வேளைகளில் உண்மைகள் கேள்விக்குறியானதாக இருக்கிறது. 1999-ஆம் ஆண்டு முடிந்தவுடன் உலகத்தின் கதி முடிவடையும் என நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டதாக ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்கள். ஆனால் இன்றோ ஆண்டு 2009 ஆகிவிட்டது. நாஸ்ட்ராடாமஸ் சொன்னது பொய்யா இல்லை புத்தகத்தில் எழுதிய விடயம் பொய்யா?



உலக சரித்திரத்தின் அடிப்படையில் மாயாக்கள் மாய மந்திர வேலைகளில் கைதேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடபடுகிறது. திறமையான சிந்தனை வளத்தினால் அருமையான நாகரிகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதைப் போலவே அவர்களின் நாட்காட்டியும் முழுமையான நிலையில் கணிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.



இந்த மாயாக்களின் ஒரு பிரிவினர் தென் மெக்சிக்கோவின் Guetmala, Belize மற்றும் Honduras போன்ற பகுதிகளில் வாழ்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வகால கட்டிடங்களும், பிரமீடுகளும், மற்றும் கோவில்களும் இங்கு இருக்கிறது.



1517-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது மாயாக்களின் கலை மற்றும் இதர தொழில்நுட்ப வேலைப்பாடுகள் பலவும் பரவலாக அழிந்து போனது. அவற்றில் முக்கியமாக மாயாக்களின் நூலகமும் அழிந்தது. அவ்வகையில் காண்போம் என்றால் இந்த நாட்காட்டியிலும் பிசகு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

Dr. Jose Argulles ஓர் அமேரிக்கர். அவர் சரித்திர ஆய்வாளர் ஆவார். Zhou Yi எனும் சீனக் குடியினரின் கணக்கியல் முறையும் மாயாக்களின் கணக்கியல் முறையும் ஒத்துப் போகிறது என்பது இவர் கருத்தாகும்.



1973-ஆம் ஆண்டு வெளிவந்த 'The Mayan Factor' எனும் தமது நூலில் பல விடயங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதய நிலையில் இப்பிரபஞ்சத்தில் "The Great Cycle' எனும் மாபெரும் சுழற்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிது. அதன் கால அளவு ஏறக்குறைய 5000 ஆண்டுகள் என குறிக்கப்படுகிறது. அதன் அடிப்படியில் மாயாக்களின் கி.மு 3113 முதல் கி.பி 2012 வரையிலான நாள்காட்டி அமைந்திருக்கக் கூடும் என கருத்துரைக்கிறார்.



இந்த மாபெரும் சுழற்சி முடியும் தருவாயில் உலகில் மாறுதல்கள் உண்டாகும் சாத்தியங்கள் இருப்பதாக மாயாக்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். இக்கணித முறை சிறு கூறுகளாக பிரிக்கப்பட்டு ஓவ்வொரு காலகட்டத்திற்கும் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை இருபது இருபது ஆண்டுகளாக பிறிக்கப்படுகிறது.



அக்கணித முறையின் இறுதி காலகட்டமாக கருதப்படுவது 1992 முதல் 2012 ஆண்டுகளாகும். இது மொத்தம் 20 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது. இதை 'The Earth Regenaration Period எனக் குறிப்பிடுகிறார்கள்.