பல நூற்றாண்டுகளுக்கு முன், தெளிவற்ற
காரணத்தோடு, ஒரு இனம் உலகின் பார்வையிலிருந்து காணாமற் போகிறது. அந்த
இனத்தின் பெயர் மாயா. அவர்கள் எங்கே போனார்கள் என்ற காரணம் யாருக்கும்
தெரியவில்லை. நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த கோவிலின் வேலைபாடுகள்
நிறைவடைய வில்லை. சிலைகள் பாதியாய் ஊருவம் வாங்கி நிற்கின்றன. அனைத்துக்
கட்டுமாணங்களும் பாழடைந்து புதைந்து கொண்டிருக்கிறது.
வேண்டுதல்களும், மாய மந்திர வேலைகளும்
நின்றுவிட்டது. அன்று முதல், இவ்வினத்தின் மூதாதைகளின் புத்திசாலிதனமும்,
கற்பித்தலும் காற்றோடு கலந்துவிட்டது. மிச்சம் மீதி இருந்த மாயா
இனத்தவர்களுக்கு எழுத்தின் மீதும் படிப்பறிவின் மீதும் கண் பார்வையற்று
போயிற்று. அவர்களுக்கு வாழ்க்கை நேறியும் மறந்து போயிற்று. அவ்வினம்
மிருகத்தன்மையை அடைந்தது. மேற் கூறியவை மெக்ஸிகோ நாட்டின் காட்டுப்
பகுதியில் மர்மமாய் தோன்றி மறைந்த மாயா நாகரிக அராய்ச்சியாளர்களின்
அறிக்கை.
1000 வருடங்களுக்கும் மேலாக இவ்வளவு
ஆச்சரியமும், அற்புதமும் நிறைந்த நாகரிகம் புதைந்து கிடந்த்தை யாரும்
கண்டறியவில்லை. 1839-ஆம் ஆண்டு, அமேரிக்காவை சேர்ந்த எழுத்தாளரான John
Lloyd Stephens தமது உதவியாளர் ஒருவரின் துணையோடு அங்கே செல்கிறார்.
பாழடைந்த பழமைமிக்க நகர பகுதி அங்கே உதித்து மறைந்ததை அவர்
கண்டுபிடிக்கிறார்.
பல்லாயிரம் ஆண்டுகாலமாக செடிகொடிகள்
படர்ந்திருந்த கட்டிடங்கள் கலைதிறன் மிக்க வேலைபாடுகளோடு உறுதியோடு
இருக்கக் காண்கிறார். அடுத்ததாக அவர் ஒரு விசித்திரத்தை காண்கிறார்.
அவ்விடத்தில் மனிதர்கள் யாரையும் காண முடியவில்லை. நீண்ட காலமாக அவ்விடம்
நாதியற்று கிடந்திருக்கிறது.
அன்று முதல் அவ்விடம்
ஆராய்ச்சிக்குள்ளாகிறது. ஆராய்ச்சியின் மேல் ஆராய்ச்சிகள் நடந்து புதைந்து
போன மாயா இனத்தவரின் வரலாற்றைத் தோண்டி எடுக்கிறார்கள். மாய இனத்தவர்கள்
ஆச்சரியமிக்க நாகரிகத்தை உருவாகியுள்ளார்கள், பலப் பல துறைகளில் அறிவு
திறன்மிக்கவர்களாக திகழ்திருக்கிறார்கள். இவையாவும் உலக நாகரிகம் வளர்ராத
காலத்தில் நடந்தவை.
இந்த கண்டுபிடிப்பின் மகிழ்ச்சியில்,
ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு விந்தையும் உதித்தது. ஒரு நகரத்தை வளர்ச்சியடைய
செய்து பின்னர் எதற்காக அதைவிட்டு மறைந்தார்கள் என்பதே அவர்களின்
வியப்பாகும்.
மாயா இனத்தவர்கள், அவர்களின்
பொற்காலத்தின் போது உலகிற்குப் பயனுள்ள பல துறைகளின் நுணுக்கங்களை
ஆராய்ந்திருக்கிறார்கள், கலைத்திறனும் புத்திக் கூர்மையும் பெற்று
விளங்கினார்கள். 16-ம் நூற்றாண்டின் போது தென் அமேரிக்கப் பகுதியை ஆட்சி
செய்த ஸ்பெயின் நாட்டினரின் கடுமையான தாக்குதலால் இப்பகுதி அழிந்து போனது.
அவர்களின் கண்டுபிடிப்பும் எழுதிய நூல்களும் அச்சமயம் அழிக்கப்பட்டது.
இச்செயல் உலகிற்கு மாயா இனத்தவரை பற்றிய
பல உண்மைகளை உணர்த்த முடியாமலும் செய்துவிட்டது. அது நமக்கு பெரும்
நஷ்டமும் கூட. தற்சமயம் நமக்கு வெளிபடையாக கிடைத்திருப்பது அந்நாகரித்தை
பற்றிய சிறு துளியளவு கண்டுபிடிப்புகள் மட்டுமே. இவையாவும் அவ்விடத்தில்
கிடைக்கப் பெற்ற சில துண்டு எழுத்துகளின் வடிவில் கிடைத்தவையாகும்.
இந்த மர்ம நகரில் பெரும் கற்களைக் கொண்ட
கட்டிட வேலைபாடுகள் உள்ளன, பெரிய அளவிளான நகர வடிவமைப்பு, எழுத்துக்கள்,
மற்றும் அறிவு நுணுக்கங்கள் மாயா இனத்தவரின் போற்றதக்க கலைத்திறன்களாகும்.
இவை தற்போதய தொழில்நுட்பத்தைவிடவும் மேலானவையாகவே கருதப்படுகிறது.
எகிப்தியப் பிரமிடுகளை அடுத்து
இந்நகரில் காணப்படும் பிரமிடுகளே பிரசித்தி பெற்று விளங்குகிறது.
இப்பிரமிடுகளை சுற்றிலும் 4 பெரிய படிகட்டுகளும் அவற்றுள் அடங்கிய 365
படிக்கட்டுகளும் காணபடுகிறது. இவையாவும் ஒரு ஆண்டிற்கான 4 காலங்களையும் 365
நாட்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலை மாயா இனத்தவரின் வான் ஆராய்ச்சி
நுட்பத்தை குறிக்கிறது. இதைத் தவிர்த்து கட்டிடங்களின் உட்புறமும்
வெளிப்புறமும் பல வகையான எண்களால், வான் மாற்றங்களை பற்றிய விடயங்கள்
செதுக்கப்பட்டிருக்கிறது.
மாயாக்களால் எப்படி அசாத்தியமிக்க
கட்டிடங்களை எழுப்ப முடிந்தது? அதுவும் அடர்ந்த காட்டிற்குள்? இவர்களது
கட்டிடங்கள் ‘டன்’ கணக்கிலான கற்களை கொண்டு அந்த மர்ம நகரத்தில்
அமைக்கப்பட்டுள்ளது. மாயக்கள் இப்பெரிய கற்களை அடர்ந்த காட்டிற்குள் கொண்டு
வந்ததும், அவற்றை சரிவர அடுக்கி கட்டிடங்களையும் பிரமிடுகளையும்
அமைத்துள்ளதும் ஆச்சரியமிக்கவையாகும். மாயாக்கள் எவ்விதமான தொழில்நுட்பத்தை
கையாண்டு இத்தகய நகரத்தை அமைத்தார்கள் என்பதும் கோள்விக்குறியே.
அராய்ச்சியாளர்கள் மாயாக்களின் நாகரிகம் கி.மு. 2000-ஆம் ஆண்டில் தொடங்கி சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். கி.மு 2000 முதல் 250 வரை வளர்ச்சிக் காலமாகவும், 250 தொடங்கி 900 வரை மாயாக்களின் பொற்காலமாகவும் கருதப்படுகிறது. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகள் மாயாக்களின் உச்சகட்டப் பொற்காலம் எனவும் கூறுகிறார்கள்.
900-ஆம் ஆண்டில், நாகரிக உச்சத்தை
அடைந்த பின் மாயாக்களின் ஆதிக்கம் மர்மமாய் மறைந்ததாய் கூறுகிறார்கள்.
அனாலும் இது முற்றிலும் உண்மையாகாது. ஆரம்ப காலத்தில் மாயாக்கள் மறைந்து
போன மர்மத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்குக் காரணம் மாயா நகரப்
பகுதி குடிகள் இல்லாமல் நாதியற்றுக் கிடந்தது தான்.
இதன் பின் ஆராய்ச்சியாளர்கள்,
மாயாக்களின் வம்சாவழியினர் தென் அமேரிக்க பகுதிகளில் இன்றளவும்
வாழ்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில ஆராய்ச்சியாளர்கள்
மாயாக்களில் பல பிரிவினர் இருந்ததாகவும் அவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே
இவர்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள்.
மாயாக்களின் மறைவிற்கு இயற்கை
சீற்றங்களே முக்கியக் காரணம் என கூறுகிறார்கள். மாயாக்களின் கலைத் திறன்
மிகவும் நுட்பமானது, சிற்பக் கலையும் வரையும் திறனும் இவர்கள் விட்டுச்
சென்ற அற்புத பொக்கிஷங்களின் வடிவில் இன்றளவும் நம்மால் காண முடிகிறது.
கட்டிட கலையும் இவற்றுள் அடங்கும். மாயாக்களால் Tikal, Palenque, Copan,
Kalakmul, Dos Pilas, Uaxactun, Altun Ha போன்ற நகரங்கள் மிகவும் திறம்பட
உருவாக்கப்பட்டுள்ளது.
இவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்று
விளங்குவது பிரமிடும் அரண்மனையும் ஆகும். மாயா நகர பகுதியில் காணப்படும்
stelae எனப்படும் கல் வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற வெற்றி
மற்றும் பல முக்கிய தகவல்கள் heiroglyphik எழுத்துவடிவில்
செதுக்கப்பட்டுள்ளது. மாயாக்கள் தூர தேச வியாபாரத்திலும்
ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்ட உண்மை.
Bonamak என்ற இடத்தில் அமைந்த
மாயாக்களின் சிற்ப கலைகள் எவ்விதப் பாதிப்பும் இன்றி கிடைக்கப் பெற்றதால்
ஆராய்ச்சியாளர்கள் இவற்றை முறையாகத் தங்களது ஆய்விற்குப் பயன்படுத்திக்
கொள்ள முடிந்தது. இச்சிற்பங்கள் மாயாக்களின் நாகரிக வளர்ச்சியைச் சிறப்பாக
எடுத்துக் காட்டுகின்றன.
மாயாக்களின் எழுத்தின் அடிப்படையில்,
இச்சிற்பங்களை வடிவமைத்தவர்கள் தங்களது பெயரை சிற்பத்தின் எதாவது ஒரு
இடத்தில் பொறித்துள்ளார்கள். இதனால் சிற்பிகள் மாயாக்களின் காலத்தில்
பேற்றதக்கவர்களாக மதிப்பளிக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிய முடிகிறது.
சிற்பகலை வருங்கால சந்ததியினருக்கு இவர்களின் சரித்திரத்தை அறிந்து கொள்ள
ஏதுவாக இருக்கும் என முன்னதாகவே இவர்கள் அறிந்திருக்கின்றனர்.
மாயாக்களால் நுட்பமாய்
செய்யப்பட்டிருக்கும் கட்டிடங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாயினும் உறுதியாகவே
இருக்கின்றன. பிரமிடு, வழிபாட்டு இடங்கள் மற்றும் வியாபார தளங்கள்
இந்நாகரிக வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்துள்ளன. இவையே
ஆராய்ச்சியாளர்கள் மாயா நாகரிகத்தை அறிந்து கொள்ளச் சிறந்த தடயமாய்
அமைந்தது.
மாயாக்கள் பிரமிடுகளின் மேல் கோவிலை
அமைத்துள்ளார்கள். பிரமிடுகள் உயரமான மலை பாங்கான இடத்தில் அமைந்திருக்கும்
பிரமிடுகளின் மேல் கோவிலை அமைப்பதால் இறைவன் இருக்கும் சொர்க வாசலை
அவர்கள் சுலபமாக நெருங்க முடிவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர் .
ஆராய்ச்சியாளார்களின் கவனத்தை ஈர்த்த
இன்னோரு விசயம் மாயாக்களின் விளையாட்டு மையம். ஒவ்வோரு மாயா நகர
பகுதிகளிலும் மிகப் பெரிய பந்து விளையாட்டு மைதானம் காணப்படுகிறது.
இம்மைதானங்கள் ஆங்கில எழுத்தின் ‘I’ ‘ஐ’ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
மாயாக்களின் எழுத்து வகைகள் நீண்ட
நாட்கள் ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் இருந்தவையாகும். 19-ஆம்
நூற்றாண்டில் மாயா நகர பகுதி கண்டுபிடிக்கப்பட்டது 20-ஆம் நூற்றாண்டின்
ஆரம்பம் வரை அவையாவும் புரியாத புதிராகவே இருந்தது.
1960 முதல் 1970 வரையில் அனைத்து
எழுத்துக்களுக்கும் அர்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்டன. இதன் வழி
‘ஸ்பெயின்’ நாட்டினரின் படையெடுப்பும், பல்லாயிர காணக்கான புத்தகங்கள்
எரிக்கப்பட்டதும் வருத்தத்துடன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் 4
புனித நூல்களில் மூன்றும் நான்காம் நூலின் சில பக்கங்களும் மட்டுமே
கிடைத்துள்ளது. இந்திய நாகரிகத்தை அடுத்து மாயாக்களும் ‘0′ பூஜியத்தை
கணக்கு வழக்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் 0 முதல் 20
வரையிலான எண் வகைகளை அமல்படுத்தியிருக்கிறார்கள். கல்வெட்டுகளில் இவர்கள்
லட்சம் வரையில் கணக்கு வழக்குகளை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். அவை
பெரும்பாலும் வான் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கிரகங்களின் அசைவுகளும், வான் நிகழ்வுகளும் துல்லியமாகக்
கணிக்கப்பட்டுள்ளன.
இன ஒழிப்பு இன்னமும் நடந்தேறிக்
கொண்டிருக்கும் சமாசாரம் என்றே கூற வேண்டும். உண்மையில் ஒரு இனத்தைப்
பூண்டோடு அழித்துவிடுவது என்பது சாத்தியமற்றது. மாயாக்கள் விசித்திர
குணாதிசயங்கள் கொண்ட மனித இனம். தென் அமேரிக்க பகுதியின் வாழ்ந்த இவ்வினம்
இப்போது இல்லை. மாயாக்கள் அழிக்கப்பட்டார்களா, அழிந்து போனார்களா அல்லது
மறைந்து போனார்களா?
அவர்கள்
அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. ஆரம்ப காலம்
முதல் பல முறை ஸ்பெயின் நாட்டினர் அங்கு படையெடுத்து இருக்கிறார்கள்.
ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது அவர்களுக்கு மாயக்களின் நுட்ப
ஆய்வுகளை அறியும் ஆவல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மாயாக்களின் வாழ்வியல்
முறை அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம்.
மாயாக்களிடம்
கட்டிடக் கலை, கணித, சமய நுட்பங்கள் அபரிமிதமாகவே இருந்திருக்கின்றன.
ஸ்பெயின் சிப்பாய்களிடம் போர் கருவிகள் அதிகமாக இருந்தன. மாயாக்களிடம்
நவீனப் போர் கருவிகள் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் செற்பம். மாயாக்கள்
வாழ்ந்த காடு, அவர்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் கைப்பற்றுவதற்காக
அவர்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மாயாக்களின்
கண்டுபிடிப்புகள் பல. அவற்றில் குறிப்பிடத்தக்கது வான்கணித முறைகள்.
அவற்றின் அடிப்படையில் உருவானதே மாயக்களின் நாட்காட்டி. மாயாக்களின்
நாட்காட்டி இரகசியம் மிகுந்ததா? "இல்லை, அது விளங்காத ஒன்று" என்றே பலரும்
சொல்வார்கள்.
புரியாத
ஒன்றை வைத்து பல குளறுபடிகள் செய்கிறார்கள், கணிப்புகள் செய்கிறார்கள்,
இறுதியில் ஏதோ ஒரு முடிவு கட்டி இது தான் அது என சொல்லிவிடுகிறார்கள்,
எல்லாம் பிசகு, பொய் புரட்டு நிறைந்து கிடக்கிறது, என சிலர் அவற்றை ஒதுக்கி
வைத்துவிடுவார்கள். சில பழமை நிகழ்வுக்கான காரணங்களைக் கண்டறிவதும் ஒரு
சுகம் தான்.
மாயாக்களின்
நாள்காட்டியில் ஒரு விசித்திரத்தைக் கண்டார்கள் ஆய்வாளர்கள். அந்த
நாள்காட்டி 21 டிசம்பர் 2012-ஆம் ஆண்டு நிறைவடைகிறது. கி.மு 3113-ஆம் ஆண்டு
அந்நாள்காட்டி தொடக்க ஆண்டாக அமைகிறது. இது முழுமை பெறாத நாள்காட்டியா?
அல்லது மாயாக்களின் மறுபட்ட கணிப்பு முறையில் கண்டறியப்பட்டவையா?
அது என்ன மாயாக்களின் கணக்கு? அவர்களின் கணித முறை இப்படி விரிகிறது. கின், உனியல், துன், கதுன், பக்துன், பிக்துன், கலப்துன்.
நாள் என்பதை அவர்கள் கின் எனக் குறிக்கிறார்கள்.
19 கின் (19 நாள்)= 1 உனியல்
359 நாள் = 1 துன்
7200 நாள் = 1 கதுன்
144 002 நாள் = 1 பக்துன்
1 872 025 நாள் = 13 பக்துன்
2 880 025 நாள் = 1 பிக்துன்
57 600 025 நாள் = 1 கலப்துன்
இந்த கணக்கியல் முறை இப்படி வியப்பளிப்பதாக இருக்கலாம். மாயாக்களின் நாள்காட்டி இயற்கை மாற்றங்கள் மற்றும் சீற்றங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இவையாவும் இரு முக்கிய புத்தகங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அப்புத்தகங்கள் 'கொடெக்ஸ்' என அழைக்கப்படுகிறது. கொடெக்ஸ் பூமியை மட்டுமன்றி கோள் மாற்றங்களின் குறிப்புகளும் உள்ளடங்கியது. கோடெக்ஸ் வான் நிபுண மாயாக்களால் எழுதப்பட்டதாக அறியமுடிகிறது.
மாயா
வகுப்பை சேர்ந்த வான் நிபுணர்கள் மாய மந்திர வேலைகள் கைதேர்ந்தவர்கள்.
அப்படியானால் இந்நாள்காட்டியின் நம்பகத்தன்மை எவ்வகையது எனும் கேள்வி
நம்முள் எழுவது சாத்தியமாகிறது. ஆரம்ப கால வாழ்க்கையில் மனிதன் ஏதோ ஒரு
வகையில் இயற்கையை சார்ந்தே வாழ்ந்திருக்கிறான். ஆதாலால் இயற்கையை போற்றும்
வண்ணம் இம்மாதிரியான மாய மந்திர வேலைகள் ஏற்பட்டிருக்கலாம்.
கோடெக்ஸ்,
கணிதமும் சிறு சிறு சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும் புத்தகம்.
அச்சிறு சிறு எழுத்து வகைகளை ஹிரோகிலிஃப் எழுத்துகள் என அறிகிறோம். அந்த
எழுத்துகள் எப்படி அமைந்திருக்கின்றன? பூமியில் உள்ள மனிதன் ஆகாயத்தில்
இருக்கும் உயிரினங்களோடு தொடர்பு கொள்வது போலும், அவர்களுடைய கடவுளர்களோடு
பேசுவது போலவும் உள்ளன.
இந்நாள்காட்டி
கி.மு 20 செப்டம்பர் 3113-ஆம் திகதியில் தொடங்குகிறது. இக்காலகட்டம்
மாயாக்களின் காலமென அழைக்கப்படுகிறது. அவர்களின் நம்பிக்கைப்படி இவ்வுலகம்
புதுபிக்கப்படும். அப்படி புதுபிக்கப்படும் நாளானது மனித சரித்திரத்தில்
முக்கிய நாளாக அமையும்.
கோள்களின்
இட மாற்றமும் பூமியின் கால மாற்றமும் மனித வாழ்க்கையில் ஏற்படும் நன்மை
தீமைகளுக்கு பாதிப்பை விளைவிற்கின்றன என்பது இவர்களின் கருத்தாகும். பூர்வ
கால எகிப்திய மக்களிடையேயும் இவ்வகை நம்பிக்கை இருப்பதை நாம் காண
முடிகிறது. Asy Syi'ra நட்சத்திரம் நைல் நதியை கடக்கும் வேளையில் தீமைகள்
விளையும் எனும் நம்பிக்கையை கொண்டிருந்தார்கள் அவர்கள்.
21
டிசம்பர் 2012 End of Times என ஆய்வாலர்களாலும் அறிஞர்களாலும்
குறிப்பிடபடுகிறது. இந்த End of Times எனும் சொல்லுக்காகன விவாதங்கள்
இன்னமும் மள்ளுக்கட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. எடுத்த எடுப்பில் அதுதான்
பூமியின் இறுதி நாள் என சொல்லிவிடுவோர் பலர் உண்டு. ஆனால் ஆய்வாளர்கள்
மற்றும் அறிஞர்களின் பார்வையில் அச்செற்களுக்கான ஆய்வுகள் ஆழமானவை.
அவற்றில் வேடிக்கையான சில சேதிகளும் உண்டு.
பூமி
சுற்றுவது நின்றுவிடும் ( கால நேர மாற்றம் இருக்காது), காலம் Pisces
எனப்படும் மீனத்தில் ஒரு சுற்று முடிந்து Aquarius எனப்படும் மேஷத்தில்
ஆரம்பமாகப் போகும் நாள், உலகம் வெள்ளி நூற்றாண்டில் இருந்து தங்க
நூற்றாண்டிற்கு மாற்றம் காண்கிறது, அதீதமான இயற்கைச் சீற்றம் ஏற்பட்டு
உலகில் மாற்றங்கள் உறுவாகும், உலகைக் காக்க கடவுளர் எழும் நாள், காலம்
பின்நோக்கி நகரும், வேற்றுக் கிரக வாசிகளோடு தொடர்பு உண்டாகும் நாள்.
அத்திகதியை
பற்றிய மேற்காணும் விடயங்கள் நகைப்புக்குறியவை. தமிழில் செலுத்தப்பட்ட
ஆரிய கதைகளைப் போலவே மனிதர்களின் மனதில் மடத்தனத்தை உட்புகுத்துபவை.
இன்று
எழுதப்படுபவனவற்றில் சில வேளைகளில் உண்மைகள் கேள்விக்குறியானதாக
இருக்கிறது. 1999-ஆம் ஆண்டு முடிந்தவுடன் உலகத்தின் கதி முடிவடையும் என
நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டதாக ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்கள். ஆனால்
இன்றோ ஆண்டு 2009 ஆகிவிட்டது. நாஸ்ட்ராடாமஸ் சொன்னது பொய்யா இல்லை
புத்தகத்தில் எழுதிய விடயம் பொய்யா?
உலக
சரித்திரத்தின் அடிப்படையில் மாயாக்கள் மாய மந்திர வேலைகளில்
கைதேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடபடுகிறது. திறமையான சிந்தனை வளத்தினால்
அருமையான நாகரிகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதைப் போலவே அவர்களின்
நாட்காட்டியும் முழுமையான நிலையில் கணிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.
இந்த
மாயாக்களின் ஒரு பிரிவினர் தென் மெக்சிக்கோவின் Guetmala, Belize மற்றும்
Honduras போன்ற பகுதிகளில் வாழ்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வகால
கட்டிடங்களும், பிரமீடுகளும், மற்றும் கோவில்களும் இங்கு இருக்கிறது.
1517-ஆம்
ஆண்டு ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது மாயாக்களின் கலை மற்றும் இதர
தொழில்நுட்ப வேலைப்பாடுகள் பலவும் பரவலாக அழிந்து போனது. அவற்றில்
முக்கியமாக மாயாக்களின் நூலகமும் அழிந்தது. அவ்வகையில் காண்போம் என்றால்
இந்த நாட்காட்டியிலும் பிசகு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.
Dr. Jose Argulles ஓர் அமேரிக்கர். அவர் சரித்திர ஆய்வாளர் ஆவார். Zhou Yi எனும் சீனக் குடியினரின் கணக்கியல் முறையும் மாயாக்களின் கணக்கியல் முறையும் ஒத்துப் போகிறது என்பது இவர் கருத்தாகும்.
1973-ஆம்
ஆண்டு வெளிவந்த 'The Mayan Factor' எனும் தமது நூலில் பல விடயங்களை அவர்
குறிப்பிட்டிருக்கிறார். தற்போதய நிலையில் இப்பிரபஞ்சத்தில் "The Great
Cycle' எனும் மாபெரும் சுழற்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிது. அதன் கால அளவு
ஏறக்குறைய 5000 ஆண்டுகள் என குறிக்கப்படுகிறது. அதன் அடிப்படியில்
மாயாக்களின் கி.மு 3113 முதல் கி.பி 2012 வரையிலான நாள்காட்டி
அமைந்திருக்கக் கூடும் என கருத்துரைக்கிறார்.
இந்த
மாபெரும் சுழற்சி முடியும் தருவாயில் உலகில் மாறுதல்கள் உண்டாகும்
சாத்தியங்கள் இருப்பதாக மாயாக்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள்.
இக்கணித முறை சிறு கூறுகளாக பிரிக்கப்பட்டு ஓவ்வொரு காலகட்டத்திற்கும்
குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை இருபது இருபது ஆண்டுகளாக
பிறிக்கப்படுகிறது.
அக்கணித
முறையின் இறுதி காலகட்டமாக கருதப்படுவது 1992 முதல் 2012 ஆண்டுகளாகும்.
இது மொத்தம் 20 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது. இதை 'The Earth Regenaration
Period எனக் குறிப்பிடுகிறார்கள்.
No comments:
Post a Comment