Wednesday, July 10, 2013

காதலானதால்...!!!

நியாயம் மறுக்கப்படுகிறது !
தவறிச்செய்த தவறுகளுக்கு உன்னிடத்தில் !
வெம்பி அழுது வெகுண்டு துடித்தாலும் !
நம்பியிருப்பவனை சட்டையே செய்வதில்லை நீ !!
அன்பே !!
உலகம் உருண்டை !
அது சுழன்றபடியேயிருக்கும் !
அதில் ஒரு நாள் !
என் முறையும் வந்தேயடையும் !
அங்கே என்னெதிரே !
நீ உன் தவறுக்கு மண்டியிட்டிருப்பாய் !
நான் உன்னை பெரிதாய் மன்னித்து மகானாவேன் !
அவ்விடம் மரணிக்கும் உன் தவறுகள் உயிரிழந்து !
ஏனெங்கில் !!
வேண்டாம் இந்த வன்கொடுமை !
விழி அறுபடும் வலிப்படலம் !
நிமிடத்திற்கு நிமிடம் மேனியில் !
முள்ளம்பன்றி உருண்டோடும் கொடிய நெடி !
என்னோடு போகட்டும் சாபங்களும் அதன் சாயல் காயங்களும் !!

No comments:

Post a Comment